ஈ-வங்கி மோசடி:வவுனியாவில் ஒருவர் கைது!
வங்கி கணக்கொன்றில் ஊடுருவி பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுளியா வேப்பங்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி சட்டத்திற்கு அமைவாக 29 வயது டைய குறித்த நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தனியார் கணக்குகளை ஊடுறுவி இவ்வாறு 10 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்க்பட்டிருந்ததாகவும், அதற்கு அமைவாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment