மீண்டும் களத்தில் டக்ளஸ்:கோத்தா பணிப்பு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை தான் வெகு விரைவில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அதே கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னரும் டக்ளஸ் தேவானந்தா இதேகோரிக்கையினை விடுத்த போதும் அதனை புறக்கணித்த காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் காணாமல் ஆக்குதலில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய பங்காற்றியிருந்தமையினை அம்பலப்படுத்தியுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment