ஈழத்தமிழர்களின் நீதியை வலியுறுத்தி சென்னையில் சுவரொட்டிகள்

ஜெனிவாவில்  நாளை மறுநாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள  நிலையில் தாயகம், தமிழகம் புலம்பெயர் தேசங்களில்

நீதிகோரி தமிழர் தரப்பு பல்வேறு சனநாயக பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக அனைத்துலக தமிழர் செயலகம் தமிழர் ஏற்பாட்டில் ஈழத் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

இதில் சிறீலங்கா தொடர்பில்  தீர்மானம் கொண்டு வரவுள்ள இணைத் தலைமை நாடுகள்  சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இணைத்தலைமை நாடுகளின் இலட்சனைகளையும்  உள்ளடக்கியதாக சுவரொட்டிகளில்  வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. 

இந்த அணுகுமுறை யானது தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் குறித்த விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும் என்று தமிழக உணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments