சீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு! புதுகட்சியோடு மன்சூர் அலிகான்!

 


கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூர் அலிகான், இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.  அதற்க்கு 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரை சூட்டியுள்ளார்.

இத்தகைய சூழலில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், "சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீமான் எனக்கு எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் புதிய கட்சியை துவங்கினாலும் சீமானுக்கு எதிராகவும், நாம் தமிழருக்கு எதிராகவும் செயல்படும் மாட்டேன்.திமுகவை அரசியலில் இருந்து விரட்டுவதே எமது நோக்கம், சீமான் ஒருபுறம் அடிக்கட்டம் , நான் ஒருபுறம் அடித்து விரட்டுவோம், திமுக ஒரு தெலுங்கு கட்சி படு கொள்ளை கட்சி என திமுகவை சரமாரியாக திட்டி விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து என்னுடைய கட்சியில் சேர யாராவது வந்தால் அவர்களுக்கு உதவி கிடைக்கும். உதைத்து விரட்டி விடுவேன். இப்போதும் சீமானுடன் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

No comments