டிரம்ப் விதித்த குடியுரிமை சட்டத்தை மாற்றினார் ஜோ பைடன்


அமெரிக்க நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர் பணி நிமித்தமாகக் குடியேற செல்லுகின்றனர்.  அவர்கள் அந்நாட்டுக் குடியுரிமை பெற விண்ணப்பம் அளித்து அதற்கான தேர்வில் பங்கு பெற வேண்டும்  முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் இந்த தேர்வு முறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டது.   தேர்வுகளில் 100 கேள்விகள் கேட்கப்பட்டன.  அவை 128 கேள்விகளாகவும் கடினமான கேள்விகளாகும் மாற்றப்பட்டன.

அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க நாட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்கள் வெளிநாட்டவருக்குச் செல்வதாகவும் குறி இந்த தடைகளை டிரம்ப் அமலாக்கினார்.    இந்த விதிமுறைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு குடியுரிமை (கிரீன் கார்ட் ) கோரி விண்ணப்பம் அளிப்போருக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவுக்கு வரும் குடும்பங்கள் பிரிந்து கிடக்க மட்டுமே இந்த விதிமுறை பயன்படுவதாகக் கூறினார்.  மேலும் இந்த தடைகளால் அமெரிக்க வர்த்தகம் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் குற்றம் சாட்டிய அவர் தாம் பதவிக்கு வந்தால் இந்த விதிகளை மாற்றுவதாக வாக்களித்திருந்தார்.

தற்போது ஜோ பைடன் அதற்கான நடவடிக்கைகளை  எடுக்கத் தொடங்கி உள்ளனர்.   இதன் மூலம் கிரீன் கார்ட் பெற விண்ணப்பித்தவர்களுக்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட உள்ளன. இனி  அமெரிக்கக் குடியுரிமை பெறுவது எளிதான ஒன்றாக அமைய உள்ளது.  மேலும் இந்த தடை நீக்கம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் விண்ணப்பித்துக் காத்திருப்போருக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது..

No comments