பொலிகண்டியில் பேரணியை இரண்டாக உடைத்த சுமந்திரன் சாணக்கியன் அணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நெல்லியடி கரும்புலி கப்டன் மில்லருக்கு அஞ்சலி செலுத்தியது. அங்கிருந்து புறப்பட்ட

பேரணி கம்பர்மலையில் முதலாவது மாவீரன் சங்கர் மற்றும் தீருவில் சங்கமாகிய மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப் புறப்பட்டது. இதனிடையே சுமந்திரன், சாணக்கியன் அணியினர் பேரணியை இன்னொரு வழியால் பொலிகண்டி நோக்கிச் சென்று இதுதான் பொலிகண்டி நாங்கள் தான் பொத்துவிலிருந்து பேரணியில் தொடக்கி வந்திருந்தோம். நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் அதில் கலந்துகொண்ருந்தோம். பேரணியில் வந்தவர்கள் எங்கேயோ போய்விட்டார்கள். பேரணி இங்கே முடிவடைகிறது. நினைவுக்கல் நாட்டுவோம் என சுமந்திரன் கூறியுள்ளார். இதனால் பேரணியில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

No comments