மியான்மாரில் ஆட்சி கவிழ்ப்பு! தடுப்புக்காவலில் ஆங் சாங் சூகி!


மியான்மார் நாட்டில் ஆங் சாங் சூகி, அந்நாட்டு அதிபர் உள்பட ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களை அந்நாட்டுப் படையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து அதிகாரங்களையும் இராணுவம் கைப்பற்றியுள்ளது. அத்துடன் ஒரு வருடத்திற்கு அவசரகாலப் பிரகடனம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அதிகாரங்கள் அனைத்தையும் இராணுவத் தளபதி கையகப்படுத்தியுள்ளார் என இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்பை ஏற்க வேண்டாம் என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ஆங் சாங் சூகி தனது ஆதரவாளர்களை வழியுறுத்தியுள்ளார்.

தனது தடுப்புக்காவலுக்கான தயாரிப்புக்கான ஒரு கடித்தத்தில் இராணுவத்தின் நவடிக்கைகள் நாட்டை மீண்டும் சார்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதாக அவர் கூறினார்.

அண்மையில் மியான்மரில் நடைபெற்ற 2 வது பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தது.  ஆனால், இராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனால் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல்  நிலவி வந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments