தடுப்பூசி போட்ட செல்வம்


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு இன்றைய தினம் (19) மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


No comments