இம்ரான் கான் கோத்தா சந்திப்பு


இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இந்த சந்திப்பானது இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செலயகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது.

நேற்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசிய இம்ரான் கான் இருதரப்பு உடன்படிக்கைளில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் இம்ரான் கான் தனது இரண்டு நாள் அரச பயணத்தை இன்று மாலை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்புவார்.


No comments