கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி!


 மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து 45 பேர் உயிரிழந்துள்ளனர் . கால்வாயில் காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, 28 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 45 சடலங்கள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டன. இறந்தவர்களில் பெரும்பாலோர் இன்று நடைபெற இருந்த ரயில்வே தேர்வில் கலந்து கொள்ள சென்றவர்களும் , உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றவர்களும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது .இவர்கள் அனைவரும் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த சத்னாவுக்குச் செல்லும் இளைஞர்கள். 

இந்த கோர விபத்தினை தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒத்திவைத்தார். அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. தனது தமோ மாவட்ட சுற்றுப்பயணம் உட்பட புதன்கிழமை நிகழ்வுகளையும் ஒத்திவைத்தார் முதல்வர் . இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ரூ .5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் . இச்செய்தினை அறிந்த பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்ததோடு இறந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் தலா ரூ .2 லட்சமும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 பிரதமர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் .  

காலை 8 மணியளவில் சர்தா பாட்னா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது, உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் பன்சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் கால்வாயில் சுமார் 50 பயணிகளுடன் வந்த தனியார் பஸ் விழுந்து மூழ்கியுள்ளது .பிரதான பாதையில் நீண்டகால போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளது . 

பேருந்து வழக்கமாக சித்தி மற்றும் சட்னா மாவட்டங்களை இணைக்கும் மலைப்பாங்கான சூயா காடி நெடுஞ்சாலை பிரதான பாதை வழியாக பயணிக்கும். ஆனால் கடந்த மூன்று நான்கு நாட்களாக சூயா காட்டி மலைப்பாதையில் நீடித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக, பஸ் பாக்வார் பகுதி வழியாக மாற்று வழியை தேர்ந்தெடுத்தது . அதிவேகமாக செல்லும் போது காலை 8 மணியளவில் பாலத்திலிருந்து கால்வாயில் மூழ்கியது. ஏழு பேர் நீந்தி உயிர் தப்பிய நிலையில் காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது 

No comments