பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோரை, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

 இதேவேளை,  போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


மாகாண சபை மற்றும் 13 ஆவது திருத்தத்தினை  முழுமையாக அமுல்படுத்துதல் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழி அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதனை பிரதி உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக்கூறினார் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments