மகிந்த விட்டது பெரிய வெடி:மனோ கணேசன்!


முஸ்லீம்களது ஜனஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவப்பு பாகிஸ்தானிய பிரதமர் வருகையினை முன்னிட்டு செய்யப்பட்ட பொய் பரப்புரை என்பது அம்பலமாகியுள்ளது.

சில முஸ்லிம் எம்பீக்கள் விழுந்தடித்து பிரதமருக்கு நன்றி சொல்ல, அந்த அறிவிப்பும், ஜெனீவாவுக்கு 2 வாரம், இம்ரான் வருகைக்கு 10 நாள் முன்வர, ஜனாஸா விவகாரம் மீண்டும் விற்பன்னர் குழுவிடம் போக, "நம்மை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது: நம் செயலை  பார்த்து நம் நிழலும் வெறுக்கிறது என நையாண்டி செய்துள்ளார் மனோகணேசன்.

இதனிடையே கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பாராளுமன்றத்தில் நேற்று  கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை உண்மையினை அம்பலப்படுத்;தியுள்ளது.


No comments