ரணில் போகின்றார்?


நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஜக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணிலை அனுப்ப முடிவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ரணிலை பெயரிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் கிடைக்கும் வரையில் அந்த நடவடிக்கை தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் குறித்த தீர்மானம் கட்சிக்கு அறியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments