ஓய்ந்த பாடில்லை கொழும்பு துறைமுகவிவகாரம்!



கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவை பேச்சுவார்த்தை குழு இன்று கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கு துறைமுக மற்றும் கப்பல் அமைச்சின் செயலாளர் யு.டி.சி.ஜெயலால் தலைமை தாங்குகிறார்.


முனையத்தை உருவாக்க இந்தியாவும் ஜப்பானும் பெற்ற திட்டங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஜெயலால் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


கிழக்கு கொள்கலன் முனையத்தை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்க இலங்கை முடிவு செய்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கூட்டுடன் வளர்ச்சிக்கு றுஊவு ஐ வழங்கவும் முடிவு செய்தது.


கொழும்பு துறைமுகத்தில் முன்மொழியப்பட்ட மேற்கு கொள்கலன் முனையம் 64 ஹெக்டேரில் 1400 மீட்டர் நீளத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


No comments