மீண்டும் முயற்சி ஆரம்பம்?

 


மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது.

அவ்வகையில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்  இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் என்ன கலந்து கொண்டுள்ளன.

இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லையென தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments