பேரணி:இன அழிப்பிற்கு நீதி கோருகின்றது!

 


இன அழிப்பிற்கு நீதி கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணி யாழ்ப்பாணத்தினை நாளை வந்தடையவுள்ள நிலையில் முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.

மன்னாரில் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஆதரவுடன் நகரும் பேரணி அடுத்து கிளிநொச்சி சென்று இறுதியாக யாழ்.நகரிற்கு பயணித்து பொலிகண்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையிலேயே இன அழிப்பிற்கு நீதி கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணி யாழ்ப்பாணத்தினை நாளை வந்தடையவுள்ள நிலையில் முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன


No comments