தீச்சட்டி பேரணி கிளிநொச்சியில்!


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இன்று தீச்சட்டி ஏந்தி பயணிக்கும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தமிழ் உறவுகளும் தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.


தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து புறப்பட்டு ஏ-9 வீதியினூடாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடைந்திருந்தது.

இந்த போராட்டமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் எமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. No comments