மனோவிடமும் வந்தது இலங்கை காவல்துறை!வடகிழக்கில் பொத்துவில்-பொலிகண்டியில் பங்கெடுத்தோரை இலங்கை காவல்துறை துரத்திவருகின்ற நிலையில் தற்போது தனது தேடுதலை கொழும்பு வரை நீடித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை, பொலிஸார் விடுத்துள்ளனர்.


அந்த அறிவிப்பு தொடர்பில், மனோ கணேசன் தன்னுடைய டுவிட்டரில் கீழ் கண்டவாறு பதிந்துள்ளார்.


பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்து, “சட்டத்தை மீறினேன்" என்று குற்றச்சாட்டி, எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என சிறீPலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது. “வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளேன என தெரிவித்துள்ளார்.


No comments