சுரேன் இராகவன் மும்முரம்!

 வெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கதவு எம்பியுமான சுரேன் இராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகை யாழ்ப்பாணம் மாவட்ட நயினாதீவில் மேற்கொள்ள புத்தசாசன அமைச்சு திட்டமிட்டு அதற்கான ஆயத்தக் கூட்டம் இன்று மாலை அலரி மாலிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

மகிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்நியமனம் வழங்கப்பட்டதுடன் முக்கிய விருந்தினராக சுரேன் நியமிக்கப்பட்டுமிருந்தார். 

இந்நிலையில் வெசாக் பண்டிகையில் பங்கெடுக்க இலங்கை ஜனாதிபதி,பிரதமர் என பலரும் படையெடுத்து வரலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments