P2P அரசிற்கு ஆதரவாம்:டக்ளஸ்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள், சர்வதேச சமுகத்திற்கு காட்டுகின்றார்கள் இந்த அரசாங்கத்தில் தாங்கள் போராட்டங்களை செய்யலாம் எனவும், மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை.
இது அரசாங்கத்திற்கு சார்பான போராட்டமே தவிர எங்களுடைய மக்களுடைய விடயங்களை வலுப்படுத்த வேண்டும் என்றோ அல்லது எங்களது மக்களுக்கான போராட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
Post a Comment