வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!


வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பாரவூர்த்தி புளியங்குளப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

மின்கம்பம் சரிந்து சேதமடைந்துள்ளது. பாரவூர்தியின் ஓட்டுநரின் நல்ல காலம் அவர் காயங்கள் ஒன்றும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தை அறிந்த மின்சாரசபை ஊழியர்கள் குறித்த இடத்திற்கு விரைந்து மின்சாரத்தைத் துண்டித்தால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
No comments