வாழைச்சேனையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு


மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவர் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்

குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீட்டின் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் முகம் குப்புற வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரும் தடயவிலாளர்களும் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. சடலம் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

No comments