யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்:கூட்டு பொறுப்பு!பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமானது நிர்வாகந்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இடிக்கப்பட்டதாக துணை வேந்தர் தெரிவித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து மட்டங்களிலும் சம்பவம் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கம்,ஆசிரிய சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியமென்பவை தமது வன்மையான கண்டனத்தை பதிவு செய்துவருகின்றன.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முன்னிலையில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது.அதிலும் மாணவர்கள் அற்ற இரவு வேளையில் வெளிச்சம் அணைக்கப்பட்டு தூபி இடிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் உள்ள அத்தனை பேரும் இந்த பழியை ஏற்க வேண்டுமெ சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments