தமிழ்நாட்டில் நினைவேந்தப்பட்டது முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்கால் நடந்த தமிழப்படுகொலையை தடுத்த நிறுத்தக் கோரி தீக்குளித்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை கௌத்தூரில் நடைபெற்றுள்ளன.

வீரவணக்க நிகழ்வில் முத்துக்குமாரின் சிலை மற்றும் முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடரேற்றி மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதேநேரம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவுகோரும் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு மலர்கள் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

வணக்க நிகழ்வில் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திரவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் வைகோ,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் லோகு அய்யப்பன், தமிழ்த் தேசியப் போியக்கத்தின் சார்பில் கி.வெக்கட்ராமன் உட்பட என தமிழின உணர்வாளர்கள், கட்சி மற்றும் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர். அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்செண்டு கொண்டுவந்து வைத்தனர்.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் சிலையை நெடுமாறன் திறந்துவைத்தார்.

அத்துடுடன் யாழ் பல்கலைக்கழ வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுச் சின்னத்தின் மாதிரி வடிவத்தை திராடவிடர் கழகத்தின் புதுவை மாநிலத் தலைவர் ஐயா லோகு அய்யப்பன் திறந்து வைத்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் இறுவட்டு மற்றும் புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


No comments