4ஆம் நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்

இன்றைய தினம் 07.01.2021  Chapelaine மாநகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேயஈருருளிப்பயணம் 595 Km தொலைவு கடந்து Paris

மாநகரத்தினை அண்மித்துவிட்டது.  

எமது தாயகத்தில் எம் உறவுகள் தொடர் இன்னல் சுமந்து நாளாந்தம் வலிகளோடு வாழ்வதனை எடுத்துக்கூறி , 2009ம்ஆண்டு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனையும், தமிழர்களுக்குதமிழீழமே தீர்வு என்பதனை கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது.   அதனைத்தொடர்ந்து Villers sur marne , Ivry-sur-Seine மாநகர முதல்வர்களிடமும் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டது'

குறிப்பாக,  Ivry-sur-Seine தமிழ்ச் சங்க உறவுகள் வருகைதர  மாநகர முதல்வர் மற்றும் உதவிமுதல்வர், மாநகரசபைஉறுப்பினர்கள் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடிவாழ்துகளும் தெரிவித்தார்கள். அதுமட்டுமன்றி,  பிரான்சு வெளிவிவகாரத்துறை அமைச்சிடமும் அரச அதிபரிடமும்தமிழர்களின் நியாயமான போராட்டம் சார்ந்தும் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்என்பதனை வலியுறுத்துவதோடு  Ivry-sur-Seine  மாநகரசபையில் மாசி மாதமே தமிழின அழிப்பு சார்ந்த தீர்மானத்தினைதாம் நிறைவேற்ற இருப்பதாகவும் உறுதி தந்திருந்தார்கள்.  மற்றும் தன் முகநூல் பக்கத்திலும் அறவழிப்போராட்டம்சார்ந்த பதிவுகளையும் இட்டிருந்தார்.  எமது மக்கள் மற்றும் மாவீரர்களின் அற்பணிப்பு வீண்போகவில்லைஎன்பதனையே இவை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் Est républicain , L’Union போன்ற ஊடகங்களின்இவ்வறவழிப்போராட்டம் கவனம் பெற்றிருந்தது முக்கியமான ஒன்றாகும். 

இன்று Ivry-sur-Seine மாநகர சபை முன்றலில் நிறைவு பெற்ற மனித நேய ஈருருளிப்பயணம் மீண்டும் நாளை 08.01.2021 Paris நாடாளுமன்றம் நோக்கி விரைந்து காலை 8.00 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற முன்றலில் கவனயீர்ப்புஒன்றுகூடலும் நடைபெற இருக்கின்றது. 

எவ்விடர் வரினும் எம் மக்கள் விடுதலை பெற்று சுதந்திர தமிழீழத்தில் வாழும் வரை நிச்சயம் தேசியத்தலைவரின்வழிகாட்டலில் எம்மை நாம் அற்பணித்து போராடுவோம் என இத்தருணத்தில் உறுதி பூணுவோம். 

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். 












No comments