3ஆம் நாள் நீதிக்கான மனித நேய ஈருறுளிப் பயணம்!

தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம்

விரைந்துகொண்டிருக்கின்றது. 

இன்றைய தினம் 06.01.2021 ,  Bar le Duc மாநகர சபையில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை  அவசியம் என்பதனையும் அவற்றினை பிரான்சு வெளிவிவகாரத்துறை அமைச்சும் , அரச அதிபரும் வலியுறுத்த வேண்டும்என்பதனை முன்மொழிந்து முதல்வரிடம் எமது விடுதலைப்பயணத்தினை எடுத்துக்கூறி கோரிக்கைகள் அடங்கிய மனுகையளிக்கப்பட்டது. 

மேலும் Est Républicain ஊடகத்தினுடன் கலந்துரையாடலினை  மேற்கொண்டுVitry le François மாநகரசபையினைநோக்கி காவல்துறையின் பாதுகாப்புடன்  விரைந்தது.  

Vitry le François மாநகரசபையின் உதவிமுதல்வர், நிர்வாகிகளோடும் Union பத்திரிகை ஊடகத்துடனும் நீண்ட நேரகலந்துரையாடல் நடைபெற்று இன்றைய நாள் மேலும் வலுப்பெற்றது. இச்சந்திப்பில் Paris ல் இருந்து வருகைதந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

குறிப்பாக உதவி முதல்வர் தன்னுடைய சிறிலங்கா பயணத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இனவெறிச் செயல்களினை நேரிலே தாம் சந்தித்ததாகவும், அவற்றினை குரல் தழும்ப விவரித்தார். மேலும் அவர்கூறுகையில் , கால ஓட்டத்தில் எமது கடமையினை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது எம்முடையஅறவழிப்போராட்டம் தற்கால சூழலில் நீதியின் கதவுகளை ஓங்கித்தட்டும் எனவும் சோர்வின்றி ஐரோப்பிய நாடுகளில்பரவலாக தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் தெரிவித்தார்கள். அத்தோடு தாம் நிச்சயமாகதம்முடைய மாநகரம் சார்ந்து அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்க விரைந்து செயற்படுவோம் எனும் வாக்குறுதிகளும்தரப்பட்டன.

காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம், ஆனால் எமது போராட்டஇலட்சியம் மாறப்போவதில்லை எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கமைய  எம்உறவுகள் மேடு பள்ளம் மற்றும் குளிர் மலை என இயற்கையோடு போராடி தம் மெய்வருத்தி எமது நீதிக்கானவேட்கையில் வருடத்தில் இரு முறை  

(மாசி , புரட்டாசி) ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு ஐரோப்பிய நாடுகளின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகஅறவழிப்போராட்டங்களை மனித நேய செயற்பாட்டாளர்கள் இயக்கி வருகின்றனர். அந்தவகையில் 2021 ம்வருடத்தின் முதல் மாதத்தில் இருந்தே  எதிர்வரும் மாசி மாதம் நடைபெற இருக்கும் 46 ஆவது மனித உரிமைகள்ஆணையகத்தின் கூட்டத்தொடரினை இலக்கு வைத்து குறுகிய காலப்பகுதியில் பல தொடர் அறவழிப்போராட்டங்களினை நடத்தும் நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் பெளத்த சிங்கள பேரினவாத சிறிலங்கா அரசு தாம் புரிந்த இனவழிப்பு குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காகபல கபட நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே கால நீடிப்பின் மூலம் மேலும் இனவழிப்புதொடர்ந்து கொண்டிருக்கின்றன,  இதுவரை கொடுக்கப்பட்ட கால நீடிப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை. தாமதமின்றி தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் சுயாதீன விசாரணையினை ஆரம்பிக்கவேண்டும் என்பதனை தம் வழித்தடம் முழுதும் அரசியல் தரப்பிடம் கோரிக்கையாக வைத்து நகர்கின்றார்கள். 

நாளை 07.01.2021  சோராத இலட்சிய வேட்கையோடு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனித நேயஅறவழிப்போராட்டம் Paris நாடாளுமன்றத்தினை நோக்கி மாவீரர் சுமந்த கனவோடு விரைகின்றது.  No comments