கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்!!


கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷெர்ப்ரூக் நகரில் இந்த சம்பவம் கடந்த சனின்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரணை நடத்தினர்.

நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு கனேடிய டொலர் $ 1546 வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments