இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


பிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்.

ஆதனை மறுதலித்து  இலங்கை நீதிமன்றங்கள் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்ப்புகள்

1. அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்புடைய  35 மில்லியன் பெறுமதியான ஊழல் வழக்கின்  சந்தேகநபர்களான கோட்டாபயா ராஜபக்சே அவர்களின் கூட்டாளிகள்  நிசங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த  பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டனர் .

2. நாமல் ராஜபக்சே மற்றும் அவரின் சகோதரர்களால் படுகொலை செய்யப்பட்ட றக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்

3.கொலை வழக்கு ஒன்றில் குற்றாவளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பிரேம்லால் விஜயசேகர அவர்கள் பாராளுமன்ற கூட்ட தொடர்களில் பங்குபற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது

4. வரலாற்று  பெருமைமிகு தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்திய வழக்கில் மஹிந்த ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான குருநாகல் மாநகரசபை  முதலவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது

5. கோட்டாபயா ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான பாராளமன்ற உறுப்பினர் டிரான் அலெஸ் அவர்கள் 124 மில்லியன் ரூபா பெறுமதியான சுயுனுயு நிறுவன நிதி மோசடி வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

6. திவிநெகும திணைக்களத்தின் ரூபா 29. 4 மில்லியன் பணத்தை  திருடிய வழக்கில் இருந்து பசில் ராஜபக்சே  அவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்

7. மகிந்த ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாக்களான  லலித வீரதுங்க மற்றும் அனுஷா பல்பிட்ட ஆகியோர்   ரூபா 600 மில்லியன் அரச பணத்தை கையாடல்  செய்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்

8. அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்கள்  மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

9. சமூக செயல்பாட்டாளர்கள் லலித் மற்றும் குகன்  கடத்தப்பட்ட வழக்கில் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு   அனுப்பட்டு இருந்த அழைப்பாணையை நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது

10. ரூபா 208 மில்லியன் பெறுமதியான அரச பணத்தை துஸ்பிரயோகம் செய்து நீச்சல் தடாகம் மற்றும் பங்களா கட்டிய வழக்கில் பசில் ராஜபக்சே அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த  சர்வதேச பயண தடையை நீதிமன்றம்  இரத்து செய்து இருக்கிறது

11. மிக் 29 விமான கொள்வனவின் பொது தனிப்பட்ட கணக்குகளுக்கு  1.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றிய வழக்கில் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ராஜபக்சே சகோதரர்களின் மைத்துனர் உதயங்க வீரதுங்க அவர்களுக்கு  நீதிமன்றம் பிணை வழங்கி இருக்கிறது

12. மாமனிதர் ரவிராஜ் , மாமனிதர் சந்திரநேரு, மாமனிதர் ஜோசப்  பரராஜசிஙகம் , துணைவேந்தர் ரவீந்திரநாத்   , ஊடகவியலாளர் நடேசன் உட்பட ஆயிரக்கணக்கான கொலைகளுடன் நேரடியாக தொடர்புபட்டு இருந்த   பிள்ளையான் மாமனிதர் ஜோசப்  பரராஜசிஙகம் அவர்களின் படுகொலை வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்

13. ரூ .1 பில்லியன் வரி மோசடி காரணமாக சீல் வைக்கப்பட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் மதுபான தொழிற்சாலை உரிமம் எந்த தண்டனையும்  இன்றி மீள ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது

14. கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய வழக்கில் தொடர்புடைய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட மீதான விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது

15. தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பில் நீதித்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டதுடன் சாட்சிகளை அச்சுறுத்திய வழக்கில் ஓய்வு நிலை மேஜர் அஜித் பிரசன்ன நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்

16. 2010-2014 காலப்பகுதியில் அரசுக்கு 40 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

17. யோசித்த ராஜபக்சே அவர்களுக்கு சொந்தமானதும்  ரூபா 365 மில்லியன் மோசடியுடனும் தொடர்புடைய தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் செயற்பட நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது

18. ராஜபக்சே சகோதரர்களின் தந்தையாருக்கான  நினைவு இல்லம் கட்டிய போது ரூபா 33 மில்லியன் அரச பணத்தை திருடிய வழக்கில் இருந்து கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்


No comments