கிழக்கை காப்பாற்ற கோரிக்கை?



இலங்கை அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் அமரவைப்பதற்கு முன் நின்று செயற்பட்ட சிங்கள இனவாத அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள மக்களை குடியேற்றி தமிழர்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜயம்பத் ஊடாக மேற்படி திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிங்கள பௌத்த அமைப்பான 'வியத் மகா' என்ற அமைப்பின் ஊடாக கோட்டபாய ராஜபக்ச அவர்களின் வெற்றிக்காக தனிச் சிங்கள கொள்கையுடன் செயற்பட்டவரையே கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்து தற்போது கிழக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்தமயமாக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன்படி ஒரு புறம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் புராதண ஆலயங்கள் உள்ள காணிகள் அபகரிக்கப்படுகின்றது. மறுபுறம் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள விவசாயிகளை கொண்டு ஆக்கிரமித்து வருகின்றனர்.


அதேபோல் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் உள்ள காணிகளில் ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டுள்ள அரசாங்க தற்போது முந்திரிகை பயிர் செய்கை என கூறி பல ஆயிரம் ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் மண் வளத்தை சூரையாடுவதற்கும், தமிழர்களின் தொழில் வாய்ப்புகளை இல்லாமல் செய்யும் நோக்குடன் சிங்கள அமைச்சர்களின் கை கூலிகளை மட்டக்களப்பில் இறக்கி அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு சிங்கள பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் மட்டக்களப்பு மாவட்டம் சென்றுகொண்டு இருக்கிறது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் பாதுப்பு,இருப்பு குறித்து சர்வதேச சமூகம், புலம்பெயர் அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments