தமிழ்த்தேசியவாதிகள்?

 


நாங்கள் மாத்திரம் தமிழ்த்தேசியவாதிகள். நாங்கள் தான் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உலகம் முழுவதும் கூறிவந்தோம்;; எனக்கூறுபவர்கள் ஏன் ஜநா மனித உரிமைகள் ஆணையகத்திற்கென தமிழ் கட்சிகள் சார்பில் முதலில் வரைபு தயாரிக்கின்றபோது இனப்படுகொலை இடம் பெற்றது என்பதை கூறவோ அதனை உள்ளடக்கவோ முன்வரவில்லையென கேள்வி எழுப்பியுள்ளார் க.சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அதற்குப் பிற்பாடு எங்களுடைய தரப்பில் இருந்து இனப்படுகொலை என்பது பிரேரணையில் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறிய பிற்பாடு தான் பலருடைய உண்மையான முகங்கள் தெரிந்தது எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.


No comments