தம்மிக பாணி: தன்னிடமில்லையென்கிறார் கெகலிய?


தம்மிகா பண்டாரா உருவாக்கிய கொவிட் பாணி தொடர்பில் அரசாங்கம் அவரை ஊக்குவிக்கவில்லை அல்லது நிதியுதவி செய்யவில்லையென கெகலிய மறுதலித்துள்ளார்.

வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெகலிய, எந்தவொரு மருந்தையும் மருத்துவ ரீதியாக நிரூபிக்காவிட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

சபாநாயகர் உட்பட சில எம்.பி.க்களிடம் தம்மிகா பாணி இருப்பதாக பேசப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளிக்கையில் கெகலிய தன்னிடம் அது இல்லை என்று கூறினார்.


மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாவிட்டால் எதையும் எடுக்க மாட்டேன் என்று அவர் கூறினார். 


No comments