வவுனியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!


தலையில் காயங்களுடன் வவுனியா தரணிக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை ஈச்சங்குளம் காவல் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு, தலைப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments