புத்தர் சிலையுடைப்பு:சிங்களவர் கைது?


மாவனெல்ல பகுதியில் உள்ள ஹிங்குலாவில் புத்தர் சிலையின் கண்ணாடி கவசத்தை சேதப்படுத்திய சந்தேகநபர்,முஸ்லீம் என இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டள்ள நிலையில்  பிரியந்த சம்பத் குமாரா என்ற 30 வயதுடைய சிங்களவரே அவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


புத்தர் சிலை வளாகத்தில் இருந்து கண்ணாடியை உடைத்து இதனுள் இருந்த 60ரூபா பணத்தை திருடியதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.


பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சந்தேக நபர் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், முன்னர் அவர் மத இடங்களுக்குள் பணம் கொள்ளையடிக்கவும் முயன்றததாகவும் தெரிவித்துள்ளார்.


போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா மேலும் கூறுகையில், இந்த சம்பவத்துடன் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்..


No comments