ரெலோ வெளியே போகாது

கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறவுள்ளது என வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை .கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடாமல் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் ரெலோ அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த அறிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது  இவ்வாறு வெளியாகிய செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனக் குறிப்பிட்டார்.

No comments