யாழில் மாணவர்களை இலக்கு வைத்தது கொரோனா ?


யாழ்ப்பாணத்தில் சத்தமின்றி கொரோனா தாக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இவர்கள் 14 வயதான மாணவியும் 23 வயதான இளைஞனும் என கூறப்படுகின்றது. 14 வயது மாணவி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.அவரை சுயதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு முன்னதாக அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அதன்போது அவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்தோடு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய 23 வயதுடைய இளைஞன் ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டார்.அவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.இருவரும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments