தமிழக உறவுகளிற்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி!


இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக தொப்புள் கொடி உறவுகளிற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் கடந்த 18ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவ உறவுகள் நால்வரிற்குமே இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


தமிழக மற்றும் ஈழ மீனவர்களிற்கு சொந்தமான தமிழர் கடலை கபளீகரம் செய்ய டெல்லி,கொழும்பு மற்றும் சீன கூட்டு முயற்சியே அப்பாவி மீனவர்களது படுகொலையென குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.  மாணவ ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகையின் பின்னராக அரங்கேற்றப்படும் இலங்கை அரசின் வெறுப்பு மன உணர்விலேயே இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் முகங்களை மறைத்தவாறாக ஈழ மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் பேரில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்த தமிழ்நாடு முதல்வரையும் மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.No comments