சத்தியமாக நானில்லை: சுரேன் இராகவன்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

உண்மையில் அது நடந்திருக்கக்கூடாதென மறுதலித்துள்ளார் சுரேன்இராகவன்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்ற பல்கலைக்கழக பேரவையில் இருக்கின்ற சுரேன் இராகவன் மற்றும் ஈபிடிபியை சேர்ந்த றூசாங்கன் என்போர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்ததாக மாணவ தலைவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதனை சுரேன் இராகவன் மறுதலித்துள்ள போதும் ஈபிடிபி தரப்பு மௌனம் காத்தேவருகின்றது.

 


No comments