வடக்கில் மேலும் 13?வடமாகாணத்தில் இன்றைய தினமும் மேலும் 13 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். யுhழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் மன்னாரை சேர்ந்த கொரோனா தொற்றாளிகளே யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்று திரும்பி வந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.பூநகரி மற்றும் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த மூவரே வெளிநாடு செல்ல முற்பட்டு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனிடையே பருத்தித்துறையில் புதிதாக ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

No comments