தடை தாண்டி அரசியல் கைதிகளிற்கு போராட்டம்?


வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பரவலாக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை கொரோனாத் தொற்றை காரணமாக காட்டி பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்த இலங்கை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

யுhழ்ப்பாணத்திலும் போராட்டத்திற்கு தடை விதிக்க முற்பட்டிருந்த நிலையில் அதனை புறந்தள்ளி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்னாயக்க போன்றோரை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையறிந்து உடனே விடுதலை செய்ய முடியாது என போராட்டகாரர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.No comments