செத்தவீட்டு அரசியல் வேண்டாம்:ஈபிடிபி மீனவ சங்கங்களிற்கு கண்டம்?



இந்திய மீனவர்களிற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா தூண்டலில் அவரது ஆதரவு மீனவ அமைப்புக்கள் போராட்ட அழைப்புவிடுத்துள்ளன.

இன்றைய தினம் வடமராட்சி மீனவ சமாசத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ சங்கத்தை சேர்ந்த நபர்கள் இந்திய மீனவர்களிற்கு எதிராக போராட மாணவ தரப்புக்கள் உள்ளிட்டவர்களை அழைத்துள்ளனர்.

எனினும் இதனை முற்றாக இதனை மறுதலித்து நிராகரித்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தொப்புள் கொடி உறவுகள் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில் செத்தவீட்டு அரசியலை எங்களிடம் செய்யவேண்டாமென எச்சரித்துள்ளனர்.

மீனவர்களது அத்துமீறல் இருநாட்டு அரசுகளாலும் பேசி தீரக்கவேண்டும்.

புதுடெல்லியோ கொழும்போ இதனை கண்டுகொள்ளாது தமிழ் மீனவர்களது உயிர்களை பணயம் வைத்து அரசியல் சித்துவிளையாட்டை செய்வதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனிடையே வடமாகாண சுதந்திர மீனவ இயக்கமும் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கமும் தொப்புள் கொடி உறவுகளது மரணத்தில் அரசியல் வேண்டாமெனவும் எச்சரித்துள்ளன.

ஆனாலும் எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றதென கவலை தெரிவித்;துள்ளார் இலங்கை அரசின் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.

அண்மைக்காலமாக இந்தியக் கடற்றொழிலார்களி;ன் எல்லை தாண்டிய செயற்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில்,இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது இப்போது நடந்திருக்கின்றது.

இந்திய மீனவர்களது இழுவைப்படகு இலங்கை கடற்படை றோடா படகால் மோதப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருந்ததும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தகக்கது.


No comments