5 இலட்சம்:இலங்கையில் முதலில் ஆமி,பொலிசுக்காம்?கொரோனா வைரஸுக்கான  Oxford-AstraZeneca   தடுப்பூசி எதிர்வரும்  27 ஆம் திகதி நாட்டுக்கு  கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகளே நாட்டுக்கு கிடைக்கவுள்ளன என்றும்;  18 வயதுக்கு மேற்பட்டோருக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த தடுப்பூசியானது முதலில் சுகாதாரத்துறையினருக்கும் பின்னர் பொலிஸார் மற்றும்  இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன் பின்னரே 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments