பிரித்தானியாவில் தனிமைப்படுத்தல் 10 நாட்களாக குறைப்பு!


பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர் வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. 

அதேபோல், கொரோனா தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான சுய தனிமை படுத்தல் காலமும் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments