தனியோட்டம்! ஐ.நா வதிவிட இணைப்பாளர் சந்திக்கும் சுமந்திரன்


இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், இலங்கை மற்றும் மாலைதீவுகான சரா ஹல்டன் ஆகியோரை நாளை புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், தமிழ்த் தரப்பின் நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படலாம் என்று தெரியவருகின்றது.

இச்சந்திப்புக்கள் தொடர்பாக சுமந்தின் தெரிவிக்கையில், “அமெரிக்க தூதுவருடனான சந்திப்பனை அடுத்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், ஐ.நா.வதிவிட இணைப்பாளரும் நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர். ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, உட்பட அனைத்து விடயங்களிலும் எமது நிலைப்பாட்டை திடமாக கூறுவோம்” என்றார்.

இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட இராஜதந்திர தரப்புக்கள் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்புக்களை  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments