தென்கிழக்கு பிரித்தானிய கடுமையான கட்டுப்பாடுக்குள்!


கொரோனா தொற்று காரணமாக தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வருகிற சனிக்கிழமை முதல் செல்கின்றன என்று சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வருகிற சனிக்கிழமை முதல் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளனர்.

பெட்ஃபோர்ட்ஷையர், பக்கிங்ஹாம்ஷையர், பெர்க்க்‌ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியவை மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

அதே போல் சர்ரே, ஈஸ்ட் சசெக்ஸ், கேம்பிரிட்ஷையர் மற்றும் ஹாம்ப்ஷையர் ஆகியவையும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

ஏற்கனவே மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஸ்வாட் பகுதியில் அதே நிலை நீடிக்கு
ம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரிஸ்டல் மற்றும் சமர்செட் பகுதிகள் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டில் இருந்து இரண்டாம் நிலை கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. அனைத்து மாற்றங்களும் சனிக்கிழமை நள்ளிரவு 00.01 மணி முதல் அமலுக்கு வரும் என்றார்.

மெட் ஹென்காக்கின் இந்த அறிவிப்பின் மூலம் இங்கிலாந்து மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் அதாவது 38 மில்லியன் மக்கள் மூன்றாம் நிலை ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

No comments