மன்னித்து விடுங்கள்! அரசியலுக்கு வர முடியவில்லை! ரஜினி


இந்தியா – தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வந்த நடிகர் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கை விடுவதாக இன்று (29) பரபரப்பான முடிவை அறிவித்துள்ளார்.

ஜனவரியில் கட்சி தொடங்குவதுடன் அது தொடர்பான அறிவிப்பை 31ம் திகதி வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

தன்னால் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை மிகவும் மன வேதனையுடன் அறிவிப்பதாக கூறியுள்ள அவர் தன்னை நம்பி உள்ளவர்களை படுகுழியில் தள்ள விரும்பவில்லை என்றும், தன்னாலான உதவிகளை மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வதாகவும் கூறியுள்ள அவர், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

No comments