பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல்களாக பதவி உயர்வு


பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா ஆகியோர் நான்கு நட்சத்திர ஜெனரல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் 35 வருட இராணுவ சேவையின் பின்னர் ஓய்வு பெறும் போது, மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்ததுடன், தற்போது இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா லெப்டினன் ஜெனரல் தரத்திலும் உள்ளனர். இந்நிலையிலேயே அவ்விருவரும் தற்போது ஜெனரல்களாக  தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவை விட, சேவை காலத்தின் போதே ஜெனரலாக தரம் உயர்த்தப்படும் இரண்டாவது இராணுவ அதிகாரியாக  இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் சேவை காலத்தின் போதே, ஜெனரலாக தரமுயர்வு பெற்ற இராணுவ அதிகாரியாக, தற்போதைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments