தொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை?

 


20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. 

இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எல்லை இன்று மாலை 6.00 மணியளவில் முல்லைத்தீவு நகருக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்தில் நிலப்பகுதிக்குள் நகர்கின்றது. எனவே கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கும். இப்போது கிடைத்து வரும் கனமழை நீடிக்கும்.

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்துடன் காற்றின் வேகமானது 80 ~ 90 KMPH வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதுடன், திடீரென 100 KMPH வேகத்தில் அதிகரிக்கக்கூடுமெனவும் யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 359 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், 12 மணித்தியாலமாக தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கமைய, யாழ் – கல்லுண்டாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 36 மணி நேரம் பொது வானிலை முன்னறிவிப்பு; இன்றிரவு: 200 மிமீ மழை வீழ்ச்சி மிகவும் வலுவான காற்று (80-90) KMPH எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூறாவளி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும்,இதனால் நாடு முழுவதம் கடும் காற்று மற்றும் மழை ஏற்படும்.

புயல் கரையை கடக்கப்போகும் திரிகோணமலை - முல்லைத்தீவு இடைப்பட்ட பகுதிக்கு வடக்கே பாதிப்பு இரட்டிப்பாகும். வவுனியாவின் வடக்கு பகுதி முதல் காங்கேசன்துறை வரை பெருவெள்ளம் மற்றும் 80-90 KMPH வரையான கடும் காற்றை இன்று நள்ளிரவில் எதிர்பார்க்கமுடியும்.

குளங்களை அண்டிய, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வடகிழக்கு மாகாண மக்கள் அடுத்த 24 மணித்தியாலங்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

No comments