பளை விபத்து! ஒரு பலி!


கிளிநொச்சி பளைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இன்று வெள்ளிக்கிழமை பளை புதுக்காட்டுச் சந்தியில் டிப்பர் வாகனமும் உந்துருறுளியும் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் புலோப்பளை மேற்கைச் சேர்ந்த 54 வயதுடைய கிருஷ்ணன் நவநீதன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பயணித்த உந்துருளியும் யாழ்பாணத்திலிருந்து பயணித்த டிப்பருமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

காயமடைந்த கிருஸ்ணன் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.No comments