கொரோனா குறித்து தகவல்களை வெளியிட்ட பெண் ஊடகவியலாளருக்கு 4 ஆண்டு சிறை!


உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸானது, சீன நாட்டில் உள்ள யூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பரவியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை தொடர்ந்து சீனா மறுத்து வந்த நிலையில், அங்குள்ள பத்திரிக்கையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தது அதை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது. 

இந்நிலையில், கொரோனா குறித்த தகவலை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளருக்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான சீன பத்திரிகையாளர் ஜான் ஜாங் என்பவர், கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது, ஆரம்பகட்ட செய்திகளை சேகரிக்க சென்றிருந்தார். 

அந்த சமயத்தில், கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மக்கள் அனுபவிக்கும் துயரங்கள், சீன அரசின் மெத்தன போக்கு என்று பல்வேறு உண்மை செய்திகளை வெளியிட்டு இருந்தார். இந்த செய்திகளை தனது எம்.எம்.எஸ், ட்விட்டர், யூடியூப் போன்ற பக்கங்கள் மூலமாக உலகம் முழுவதும் சென்றடைய செய்தார். இது சீன அரசுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, கொரோனா குறித்த உண்மைகளை மறைக்க தடையாக இருந்ததால், பெண் பத்திரிகையாளர் ஜான் ஜாங்கை கைது செய்து, நான்கு வருட சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ளது.

No comments