நாளைய தேர்தல்: மனதில் என்ன?

நாளைய யாழ்.மாநகர முதல்வர் தெரிவு தொடர்பில் பார்த்தீபன் எனும் உறுப்பினரது பதிவு அனைவரது கவனனத்தையும் கரிசனையினையும்

தோற்றுவித்துள்ளது.

கடந்த மூன்று வருடங்கள் இடம் பெற்ற வினைத்திறன் அற்ற  செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு எதிர்பை தெரிவித்ததன் அடிப்படையில் முதல்வர் அவர்கள் பதவியிழந்தார். தற்பொழுது மீண்டும் அவரே முதல்வராக போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேறு நபர்கள் யாரும் போட்டியிடாத நிலை ஏற்படுமானால் அவரே மீண்டும் முதல்வராக பதவியேற்பார். நிலையில் அவர் சமர்ப்பிக்கும் பாதீடு கடந்த காலங்களில் போல் மீண்டும் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுவே நியதி. அந் நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ் சபை கலைக்கப்படும் நிலை ஏற்படும்.

வட்டாரங்களின் அபிவிருத்தி மற்றும் வட்டார மக்களின் மேம்பாடு தொடர்பாக உள்ளுராட்சி மன்றங்களே கூடிய கரிசனை செலுத்துகின்றன. எமது வட்டார மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பாக உள்ளுராட்சி மன்றங்களில் தான் கேள்வி கேட்க முடியுமே ஒழிய பாராளுமன்றத்தில் அது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது. வட்டார மக்களின் மேம்பாடு தொடர்பில் கூடிய வகிபாகம் வகிக்கின்ற ஒரு சபை கலைந்து போதல் ஏற்புடையது அல்ல என்பதன் அடிப்படையிலும்...இ

நாம் காலம் முழுவதும் மற்றவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக் காட்டி அதனை விமர்சனம் செய்து அதனை வாக்குகளாக மாற்றி விமர்சன அரசியலை மட்டும் தான் தொடருகின்றோமே ஒழிய நாம் ஒரு விடயத்தினைப் பொறுப்பேற்று மக்கள் இடர்களைத் தீர்த்து மக்கள் மனம் கவர்ந்த மக்கள் நலன்சார்அரசியலை செய்வதற்கு முன்வருவதில்லை. பிழை விட்டுக் கொண்டே இருப்பவர் பிழை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்தும் அவர் அதில் இருப்பதற்கு தெரிந்தோ தெரியாமல் அனுமதித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தொடர்ந்தும் அவரை விமர்சனம் செய்து கொண்டே காலத்தை கடத்தி கொண்டு போதல் மட்டும் தான் செயற்பாடா? ஆக விமர்சன அரசியலுக்கு அப்பால் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவ் மாநகர மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து காட்டவேண்டும் முயற்சிப்பதே சிறப்பானது என்பதன் அடிடையிலும் சட்டத்தரணி மணிவண்ணன் நாளை மாநகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இது சில முரண்பாடுகளைத் தோற்றுவிக்கலாம் சிலருடைய பலத்த கண்டனத்திற்கும் கோபத்திற்கும் நடவடிக்கைளுக்கும் உள்ளாகலாம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. ஆனால் அதனையும் கடந்து நாம் என்றும் முதலில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ள எங்களுடைய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக அர்பணிப்புடன் செயற்பட வேண்டிய தேவையுள்ளது. 'அவர் செய்கின்றார் இல்லை' ' அவர் செய்ய விடுகின்றார் இல்லை' என்ற விமர்சனங்களால் மட்டும் எமது மக்களின் ஏதிர்பார்ப்புக்களை தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியாது ? 'அவர் செய்யவில்லை என்றால் யார் அதனை செய்வது ? நீங்கள் போட்டியிட்டு இருக்கலாம் தானே? செய்திருக்கலாம் தானே?' என்ற வினாக்களுக்கு இடமளிக்காமல் போட்டியிடுவதே சிறப்பானது. நாளை சில வேளை வெற்றி பெற்றால் எம்மாலும் செய்ய முடியாமல் போகலாம் எமது மக்கள் எம்மை விமர்சனம் செய்யலாம் ஆனால் எம் மக்கள் எங்களை விமர்சனம் செய்வார்கள் என்று பயந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுத்து அவர்களை விமர்சனம் செய்கின்ற அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் பார்க்க முயன்று தோற்றுப்போதல் சிறப்பானது.


No comments